Friday, July 16, 2010

அம்மா சொல் கேள்!















செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்து

கொண்டிருந்தன.அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன்,

மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல்

வாசித்துக்கொண்டிருந்தான்.புல்வெளியைச் சுற்றி வேலி

போடப்பட்டிருற்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி

மேய்ந்து கொண்டிருந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த

ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது. வேலிக்குள்

முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது

போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி,

"உனக்கு என்னவேண்டும்?" என்று கேட்டது.

ஓநாயும் "நண்பா, நண்பா...இங்கே இளசான புல் கிடைக்குமா

என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப்

பிரியம். அதைத் தின்று, ஜில்லென்று தண்ணீர் குடித்தால்

எவ்வளவு நன்றாக இருக்கும்! உங்களுக்கெல்லாம் அந்த

யோகம் கிடைத்திருக்கிறது! எனக்கு அது கிடைக்கவில்லை....."

என்று வருத்தத்துடன் கூறியது.

"அப்படியா! நீ புல்லா சாப்பிடுவாய்? நீ மாமிசத்தைத்தான்

சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும்

சொன்னார்களே?" என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக்

குட்டி. "சேச்சே...அதெலாம் சுத்தப் பொய்!" என்றது ஓநாய்.

"அப்படியென்றால் இரு. நான் வெளியே வந்து, மலையின்

அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன்.

நாம் இரண்டு பேரும் போய், அதைச் சாப்பிட்டுவிட்டு,

ஃப்ரெண்ட்ஸாக ஜாலியாகச் சுற்றலாம்!" என்று சொல்லிவிட்டு

ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்து, ஓநாயின்

பக்கம் போயிற்று. "உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக்

கொன்று தின்றது. அந்த ஆட்டுக் குட்டிக்குத் தானாகத்

தெரியவில்லை. அது போகட்டும், பரவாயில்லை...அனுபவம்

நிறைந்த அம்மா, அப்பா பேச்சை கேட்டிருந்தால், மதிப்பு

வாய்ந்த, தன் உயிரை இழந்திருக்காது அல்லவா?

Friday, July 2, 2010



Very Nice Love story

மனதை அதிரவைத்த காதல் கதை

ஒரு அழகான கிராமம்.அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்.அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள்.
இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர். உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர் மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர்.அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான். உடனே அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள்......

ரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து வந்தாள். திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள்.
அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது,இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது.

அவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்த நாள் அதே
தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது.ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை

அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது.அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள்.இருந்தும் கறை போகவில்லை.

அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள்.அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள்.. அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது.உடனே இவள் பயத்தினால் அலறினாள்.

அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது,"லூசாடி நீ!,ஸர்ப் எக்ஸல் போடு கறை போயிடும்" என்றது.

இதைப் படித்ததும் உடனே என்னை உதைக்கத் தோணுமே உங்களுக்கு! நானே இதை எனக்கு அனுப்பியவரைத் தேடிக்கிட்டு இருக்கேன்